Print this page

வைத்தியர் சாபி எதிரான வழக்கு விசாரணைக்கு

வைத்தியர் சாபிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பெற்றுள்ள தகவல்கள் அடங்கிய ஓர் அறிக்கை அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

வைத்தியர் சாபி தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக இதுவரை 758 நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.