Print this page

ரணிலின் நிலை

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனையின் துணைப் பணிப்பாளர் டாக்டர் ருக்‌ஷான் பெல்லனா தெரிவித்தார்.

அவரது உடல்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால், இன்று (29) அவரை பொது வார்டுக்கு மாற்ற முடியும் என்று அவர் கூறினார்.