Print this page

அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் ஐவருக்கு பதவி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஐவருக்கு, ஐக்கிய தேசியக் கட்சி தொகுதி அமைப்பாளர் பதவியை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

கட்சியின் செயற்குழுக்கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (19) இந்த செயற்குழுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.