Print this page

மாகாண சபை தேர்தலை நடத்த அரசு அஞ்சாது

September 05, 2025

மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், எல்லை நிர்ணய அறிக்கை சபையில் நிறைவேற்றப்படவில்லை. எனவே, பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது பற்றி பரிசிலீக்கப்படுகின்றது. இணக்கம் எட்டப்பட்டால் அது தொடர்பான சட்ட திருத்தம் சபையில் முன்வைக்கப்படும்.

தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை. அதனை நடத்தும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்“ என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு எந்த ஒரு வேலைத்திட்டமும் இடம்பெறவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவரும் ஈபிஆர் எல்எப் அமைப்பின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.