கடவத்தை -மீரிகம மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் அபிவிருத்திப் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
கடந்த பொருளாதார நெருக்கடி சூழலில் 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை மற்றும் மீரிகம இடையேயான பகுதியின் அபிவிருத்திப் பணிகள் செப்டம்பர் 17 ஆம் திகதி மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் அபிவிருத்தி பணிகளைத் தொடங்கி வைப்பார். திட்டத்தை மீண்டும் தொடங்க சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறப்பட்டுள்ளது.
37 கிலோமீற்றர் நீளமுள்ள இந்தப் பாதை 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறைவடையும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.