அனுர விதானகமகே கொலை தொடர்பாக 'பெகோ சமன்' மற்றும் 'தெம்பிலி லஹிரு' ஆகியோரை டிசம்பர் 02 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (17) பொலிஸாருக்கு அனுமதி அளித்துள்ளது.
அவர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
"பெகோ சமன்" மற்றும் "தெம்பிலி லஹிரு" ஆகியோர் கடந்த 05 ஆம் திகதி இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.