Print this page

பயங்கரவாதத்துடன் தொடர்பில்லாதவர்களை விடுவிக்குமாறு பணிப்புரை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னர் சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்போது, பயங்கரவாதத்துடன் தொடர்புப்படாத அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி, உரிய பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு சபை நேற்று பிற்பகல் கூடிய வேளை ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.