Print this page

கதிர்காமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள் மீட்பு!

கதிர்காமம், வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து 74 T56 ரக மெகசின்கள், 35 LMG ரக ட்ரம்ஸ் மற்றும் 05 MPMG ட்ரம்ஸ் பொக்ஸ் உள்ளிட்ட பல இனங்காணப்படாத மெகசின்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தோட்டாக்களுடன் கூடியது என சந்தேிக்கப்படும் 2 பெட்டிகளும் ஆயுதங்கள் என சந்தேகிக்கப்படும் 2 பொதிகளும் குறித்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதையடுத்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெஹெரகல நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைந்து வருவதால் இந்த பொருட்கள் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் கோனகனார பொலிஸ் பிரிவின் கீழ் வருவதால், மேலதிக விசாரணைகளுக்காக கோனகனார பொலிஸ் நிலையத்தில் அவை ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த நீர்த்தேக்கத்தின் மதகு அருகே இன்னும் தண்ணீர் இருப்பதால், கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் அந்த இடம் முழுவதும் மேலும் ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.