மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையாக செயல்படும் முச்சக்கர வண்டிகளின் பதிவு மீண்டும் ஆரம்பமாகியது.
டிசம்பர் 31ஆம் திகதி வரை வண்டிகளின் பதிவு தொடரும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் காமினி ஜாசிங்கே தெரிவித்துள்ளார்.
எனவே மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் எந்தவொரு முச்சக்கரவண்டி சாரதியும் பதிவுகளை மெற்கொள்ளலாம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.