Print this page

தங்கம் விலை உயர்வு

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், நாட்டில் தங்கத்தின் விலை 5,000 ரூபாவால் உயர்ந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன்  தங்கத்தின் விலை 310,000 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், நேற்று (10) இது 305,300 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

அதேவேளை, 24 கரட் தங்கத்தின் விலை நேற்று 330,000 ரூபாவாக இருந்த நிலையில், இன்று 335,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.