Print this page

பிரதமர் சீனா பயணம்

2025ஆம் ஆண்டுக்கான பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒரு பகிரப்பட்ட எதிர்காலம் பெண்களின் முழுமையான வளரச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை' எனும் கருப்பொருளின் கீழ் பிஜிங்கில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சீன அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் பெண்கள் அபிவிருத்தி அமைப்பும் இணைந்து இக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த விஜயத்தின் போது, ​​பிரதமர் அமரசூரிய ஒரு முக்கிய உரையை நிகழ்த்துவதோடு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி கியாங் ஆகியோருடன் பல உயர்மட்ட இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.