Print this page

இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் கைது

 

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மே வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்காக அண்மையில் ஒரு சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.

சர்வதேச பொலிஸ் பிரிவினரின் (Interpol)உதவியுடன் கொழும்பு குற்றப் பிரிவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2025 பெப்ரவரி 19 திகதி காலை நீதிமன்ற வளாகத்தில் சமிந்து தில்ஷன் பியுமங்க கண்டனாரச்சி  என்ற நபர் மேற்கொண்ட குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கணேமுல்ல சஞ்சீவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைதான சமிந்து தில்ஷனின் காதலி என கூறப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Last modified on Tuesday, 14 October 2025 03:22