Print this page

நெவில் வன்னியாராச்சிக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நெவில் வன்னியாராச்சியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டிய சந்தேகத்தின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.