Print this page

பாதாள குழு உறுப்பினர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவர்

பாதாள உலகக் கும்பல்கள் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எச்சரித்துள்ளார்.

இலங்கை அரசியலிலும் பாதாள உலகக் கும்பல்கள் எவ்வாறு நுழைந்துள்ளன என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆனந்த விஜேபால பின்வரும் கருத்தை வெளியிட்டார்.

“இதுவரை கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் மூலம் தகுந்த தண்டனை வழங்கப்படும். அவர்களுடன் தொடர்புடைய எந்த பொது நபரோ அல்லது அரசியல்வாதியோ தப்பிக்க மாட்டார்கள். அவர்கள் அனைவரையும் நாங்கள் கைது செய்வோம். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தலைமறைவாக உள்ள அனைத்து பாதாள உலகக் கும்பல்களையும் கைது செய்து சிறையில் அடைப்போம். இந்த நிர்வாகத்தின் போது பாதாள உலகக் கும்பல்களை ஒழித்து சிறையில் அடைப்போம்,” என்று அவர் கூறினார்.