Print this page

ஹரின் பெனாண்டோவுக்கு புதிய பொறுப்பு

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய பிரதான பதவியொன்றை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ, அரசியல் அணிதிரட்டல் பிரதிச் செயலாளர் நாயகமாக (Deputy Secretary General of Political Mobilization) நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, அவற்றை ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலில் ஈடுபடுத்துவதே முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோவுக்கு வழங்கப்பட்ட பதவியாகும்.

அது மாத்திரமன்றி, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்யும் ஆயிரம் கூட்டங்களுக்கு பொறுப்பாக ஹரின் பெனாண்டோ செயற்படுவார்.