Print this page

SJB வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக் கொலை

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மாத்தறை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். 

இதேவேளை துப்பாக்கித்தாரி பிரதேச சபை வளாகத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.