Print this page

மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாம் வேண்டும்

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாமை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசரிடம் சட்டமா அதிபர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரமொன்றில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.