Print this page

கைதான சட்டத்தரணி தடுப்புக் காவலில்

கணேமுல்ல சஞ்சீவவை படு செய்வதற்காக வந்த இஷார செவ்வந்திக்கு, கைத்துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவதற்காக 'தண்டனைச் சட்டக்கோவை' நூலின் பிரதியொன்றை வழங்கிய சட்டத்தரணியை  மேலும் விசாரிக்க சிஐடி 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளது.

குறித்த பெண் சட்டத்தரணி நேற்று இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார்.