Print this page

செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி போராட்டம்!

யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினர், செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டியும், பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆதரவாக செயற்படுகின்றோம் என்பதை காட்டுகின்ற முகமாகவும் இன்றையதினம் செம்மணி பகுதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு உண்மையான நீதி கிடைக்கப்பெற்று மக்களின் கண்ணீருக்கு விமோசனம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி புதைக்குழி அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்துமயானத்தின் வாயிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது பேரணியாக செம்மணிச்சந்தி வரை சென்றது.

பின்னர் உயிர்நீத்த உறவுகளின் அஞ்சலிக்காக செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு தூபியடியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

 

Last modified on Thursday, 30 October 2025 06:35