Print this page

எரிபொருள் விலைகளில் மாற்றம்

November 01, 2025

நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் பெற்றோல் ஒக்டேன் 92, சுப்பர் டீசல் ஆகிய எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

பெற்றோல் ஒக்டேன் 95, ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றமில்லை.

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

CEYPETCO/ LIOC

  • பெற்றோல் 92: ரூ. 5 குறைப்பு– ரூ. 299 இலிருந்து 294
  • சுப்பர் டீசல்: ரூ. 5 அதிகரிப்பு – ரூ. 313 இலிருந்து ரூ. 318
  • பெற்றோல் 95: விலையில் மாற்றமில்லை – ரூ. 335
  • ஒட்டோ டீசல்: விலையில் மாற்றமில்லை – ரூ. 277
  • மண்ணெண்ணெய்: விலையில் மாற்றமில்லை – ரூ. 180