Print this page

தங்கம் விலை மேலும் குறைவு

November 04, 2025

இலங்கையில் இன்று (04) தங்கத்தின் விலை 1000 ரூபாயினால் குறைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க விற்பனை சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (04) காலை தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூபாய் 293,200 ஆகக் குறைந்துள்ளது.

நேற்று (03) இதன் விலை ரூபாய் 294,000 என இருந்தது.

இதற்கிடையில் நேற்று ரூபாய் 318,000 ஆக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை இன்று (04) ரூபாய் 317,000 ஆகக் குறைந்துள்ளதாக கொழும்பு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.