Print this page

'விண்ணப்பப்படிவங்களை உடனடியாக ஒப்படைக்கவும்'

வாக்காளர் பெயர் பட்டியலை புதுப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து கிராம உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னநாயக்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

குறித்த விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள தகவல்களை உரிய வகையில் பூர்த்தி செய்து அனுப்புமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவது தொடர்பான பிரச்சினைக்கு நீதிமன்றத்தினாலோ அல்லது நாடாளுமன்றத்தினாலோ, தீர்வு காணப்படும் பட்சத்தில் உடனடியாக அந்த தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.