Print this page

தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற ஐவர் பலி

November 06, 2025

சிலாபம் - தெதுறு ஓயாவில் நீராடச் சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

முன்னதாக நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்ட நிலையில் தற்போது ஐவரும் உயிரிழந்துள்ளனர்.

10 பேர் கொண்ட குழுவொன்று சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் காணாமல் போயிருந்தனர். 

காணாமல் போனவர்களில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் அவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் நீராடச் சென்ற நிலையில் காணாமல் போன ஐந்து பேருமே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது