சமூக ஊடகங்களில் செல்பி புகைப்படங்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான F.W.U. வூட்லர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுற்றுலா, யாத்திரைகள் மற்றும் பல்வேறு சுற்றுப் பயணங்களுக்காக வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது, தாம் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் செல்பி புகைப்படங்களை பதிவேற்றினால் உங்களை பின் தொடரும் குற்றவாளிகளுக்கோ அல்லது தங்களது வீடு மற்றும் சொத்துக்கள் குறித்து நோட்டமிடும் நபர்களுக்கோ சாதகமான தகவலாக அமையலாம் என்று அவர் விளக்கியுள்ளார்.
அத்துடன் சுற்றுலா பயணங்களுக்காக தெரிவு செய்யும் பஸ் அல்லது வாகனம் மற்றும் அதன் சாரதி குறித்து சரியான புரிந்துணர்வுடன் இருப்பதும் மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.