Print this page

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை தொழிற்சங்க நடவடிக்கை

November 16, 2025

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (17) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளை முறையாகத் தீர்க்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பாக அரசாங்க தரப்பினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்குச் சாதகமான பதில் கிடைக்காததால் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.