Print this page

பாதாள உலகக் குழுவை சேர்ந்த 80 பேருக்கு சிவப்பு பிடியாணை

November 19, 2025

பாதாள உலக செயற்பாட்டாளர்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அவர்களில் 80 பேருக்கு சிவப்பு அறிவிப்புகளை பிறப்பித்து அவர்களை நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக  பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

"நாங்கள் இப்போது பாதாள உலக நடவடிக்கைகளுக்கு எதிரான எங்கள் நடவடிக்கையை பெருமளவில் விரிவுபடுத்தியுள்ளோம். பாதாள உலக செயற்பாட்டாளர்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இராஜதந்திர ரீதியாகவும், எங்கள் புலனாய்வாளர்கள் மற்றும் சர்வதேச காவல்துறையினரின் கூட்டு விசாரணைகள் மூலமாகவும், மேலும் 80 பேருக்கு சிவப்பு அறிவிப்புகளை பிறப்பித்து அவர்களை இந்த நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன."