Print this page

நுகேகொட ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸார் எச்சரிக்கை!

November 21, 2025

அரசாங்கத்திற்கு எதிராக, இன்று( 21) திட்டமிடப்பட்டுள்ள எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியின் ஏற்பாட்டாளர்கள், அந்தப் பகுதியில் அமைந்துள்ள உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்கு எந்தவித இடையூறும் விளைவிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு பொலிஸ் வலியுறுத்தியுள்ளது. 

இந்த நிலையில், நுகேகொடை பகுதியின் மையத்தில் அமைந்துள்ள அனுலா மகளிர் வித்தியாலயம், புனித ஜோன்ஸ் கல்லூரி, புனித ஜோசப் மகளிர் வித்தியாலயம், சமுத்ரா தேவி மகளிர் வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகளில், திட்டமிடப்பட்ட பேரணி நடைபெறும் அதே நேரத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடைபெறுவதாக பொலிஸ் அறிவித்துள்ளது.