Print this page

தெஹிவளை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

December 06, 2025

தெஹிவளையில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் மைதானப் பகுதியில் இன்று மாலை (06) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான பாதிக்கப்பட்டவர் களுபோவில தெற்கு போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து பொலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைகளுக்குப் பிறகு மேலும் விவரங்கள் வெளியிடப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.