Print this page

சீரற்ற வானிலையால் 618 பேர் உயிரிழப்பு

December 07, 2025

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

அனர்த்தங்களால் 209 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நிலவிய சீரற்ற வானிலையால் நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 583,030 குடும்பங்களைச் சேர்ந்த 2,078,436 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் 29,874 குடும்பங்களைச் சேர்ந்த 100,124 பேர் 990 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

4,071 வீடுகள் முழுமையாகவும், 71,121 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.