முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனர்த்த முகாமைக்காக நிறுவப்பட்ட அமைச்சகத்தைக் கலைத்து, அதன் அனைத்து நிறுவனங்களையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்தார். அதனால் இந்த பாரிய அனர்த்ததுக்கு அவரே பொறுப்பு என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் துமிந்த நாகமுவ கூறுகிறார்.
தற்போதைய அரசாங்கம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய அனைர்த்த முகாமை குழுவைக் கூட்டியது, ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
2004 சுனாமியின் அதிர்ச்சியால் நிறுவப்பட்டஅனைர்த்த முகாமை அமைச்சகம் ஒழிக்கப்பட்டு, பேரிடர் ஏற்பட்டால் செயல்படும் கட்டமைப்பை நாடு இழந்தது என்றும், நாளை சுனாமி ஏற்பட்டாலும் இதுவே விளைவு என்றும் துமிந்த நாகமுவ வலியுறுத்துகிறார்.
நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.