Print this page

அசோக ரன்வல வைத்தியசாலையில்

December 12, 2025

முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல செலுத்திய ஜீப் வண்டி, மற்றுமொரு காருடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நேற்று (11) இரவு சப்புகஸ்கந்த, தெனிமல்ல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் காரில் பயணித்த 25 வயதுடைய பெண், அவரது 6 மாதக் குழந்தை மற்றும் 55 வயதுடைய பாட்டி ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன், விபத்தில் காயமடைந்த ஜீப் வண்டியில் பயணித்த பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவும் சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

விபத்துக்குள்ளான ஜீப் மற்றும் காருடன், சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

விபத்து தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.