Print this page

தமிழக முதல்வரை சந்தித்த இலங்கை பிரமுகர்கள்

December 18, 2025

தமிழக முதலமைச்சர் முக.ஸடாலின் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று முதலமைச்சர் செயலகத்தில் சுமார் 1.00 மணி நேரம் இடம்பெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்படல் வேண்டும், ஒற்றையாட்சி அடிப்படையிலான ஏக்கிய ராஜ்ஜிய அரசியிலமைப்பு தமிழர் மீது திணிக்கப்படகூடாது,  ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன.

முதலமைச்சருடன்  பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP
பொ ஐங்கரநேசன் தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்
செ.கஜேந்திரன் செயலாளர் ததேமமு
த.சுரேஸ் தேசிய அமைப்பாளர்
க.சுகாஷ் (சிரேஸ்ட சட்டத்தரணி)
உத்தியோகபூர்வ பேச்சாளர்
ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) பிரசாரச் செயலாளர் ஆகியோர் இலங்கை தரப்பில் கலந்து கொண்டனர்.