உண்மையில் புயல் தாக்கியது நாட்டை அல்ல, எதிர்க்கட்சியையே என நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு பேரழிவு ஏற்பட்ட வேளைகளில் லஞ்சம் பெற்று, திருட்டுகளில் ஈடுபட்ட எதிர்க்கட்சி, இன்று ஆலோசனைகள் வழங்கும் நிலைக்கு வந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
அந்த காலத்தில் வெளிநாட்டு கணக்குகள் மூலம் பணத்தை விழுங்கிய தலைவர்களின் மகன்களே, இன்று பேரழிவு முகாமைத்துவம் குறித்து பாடம் புகட்டிக் கொண்டிருப்பதாகவும் எரங்க குணசேகர குறிப்பிட்டார்.
ஒரு கிராமத்தில் மரணம் நிகழ்ந்த பின்னர், கட்சி வேறுபாடுகளைப் புறக்கணித்து அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நிலையில், அந்த வீட்டில் சூது விளையாட தயாராக நிற்கும் இத்தகைய எதிர்க்கட்சி, இதற்கு முன் ஒருபோதும் இருந்ததில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.