Print this page

ருக்ஷான் பெல்லன பணி நீக்கம்

December 19, 2025

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி இயக்குநர் மருத்துவர் ருக்ஷான் பெல்லனவின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவு, சுகாதார மற்றும் மக்கள் ஊடக அமைச்சின் கடமையாற்றும் செயலாளர் விசேட மருத்துவர் டபிள்யூ.கே. விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் சர்ச்சைக்குரிய நிலைமையை உருவாக்கும் வகையிலும், பொதுமக்களிடையே குழப்பதை ஏற்படுத்தும் வகையிலும், உரிய அனுமதி இன்றி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்ததன் காரணமாகவே இந்த பணிநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்காலத்தில் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.