Print this page

இன்றைய வானிலை

December 22, 2025

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னிறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும், வடமேல் மாகாணத்திலும், அம்பாறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.