இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று நாட்டுக்கு வருகைதரவுள்ளார்.
இன்று பிற்பகல் அவர் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக சுற்றுலா பிரதியமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்தார்.
நாட்டில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்ஷங்கர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக இந்தியாவினால் ஆரம்பிக்கப்பட்ட சாகர் பந்து திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையின் முக்கிய விடயமாக இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் அமைந்துள்ளதாக சுற்றுலா பிரதியமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு குறிப்பிட்டுள்ளார்.