முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தற்போது கொழும்பு நுகேகொடை பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் தங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ இல்ல வசதிகளை அரசாங்கம் இரத்து செய்ததையடுத்து, விஜேராம மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்த அவர் கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி அங்கிருந்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து தங்கல்லையிலுள்ள தனது இல்லத்தில் வசித்து வந்த மஹிந்த ராஜபக்ச, கடந்த வாரம் மீளவும் கொழும்புக்கு வந்துள்ளார். இதன்போது நுகேகொடை பகுதியில் உள்ள வீடொன்றை அவர் வாடகைக்கு எடுத்துள்ளார்.
அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான இலகுத்தன்மையை கருத்திற்கொண்டே அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குறித்த வீடு அவரது நண்பர் ஒருவருக்குச் சொந்தமானது எனவும், அது குத்தகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.