Print this page

அரசாங்கம் நாளுக்கு நாள் பள்ளம் நோக்கி செல்கிறது

December 28, 2025

அரசாங்கம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதுடன், இந்த ஆட்சியால் நாட்டை சரியாக நிர்வகிக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது என, சமகி ஜன பலவேக (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார தெரிவித்தார்.

கடந்த ஆண்டு “159 மலர் செடிகள்” போல இருந்த குழு, தற்போது எந்த பயனும் இல்லாத காட்டுச் செடிகள், மூட செடிகள், லாடப்பா செடிகள் மற்றும் முள்ளுக் காடுகள் போல வளர்ந்துள்ளன என்றும் அவர் விமர்சித்தார்.

தற்போதைய அமைச்சரவை எந்தத் தொலைநோக்கும் திறனும் இல்லாத, செயலற்ற குழுவாக இருப்பதால், அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொண்டு, அந்த 159 பேரில் நாட்டை முன்னேற்றக்கூடிய ஒரே ஒரு பயனுள்ள செடியாவது உள்ளதா என்பதை கண்டறியுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் நலீன் பண்டார தெரிவித்தார்.

ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.