Print this page

70 வயது கிழவி தயாரித்த மதுபானத்தால் 5 உயிர்கள் பலி!

சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்தியதில் வென்னப்புவ பகுதியை சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் வென்னப்புவ, தம்பரவில பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் நால்வர் மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் சட்டவிரோத முறையில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை விநியோகித்த 70 வயதான பெண் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.