நாமல் ராஜபக்ஷ அல்லது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக உள்ள அரசை தாம் விரும்பவில்லை என்று பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரி தெரிவித்துள்ளார்.
அரசைக் காக்காமல் கல்வியை காக்க ஒன்றிணைய வேண்டும் என பேராசிரியர் அர்ஜுன பராக்ரம அழைப்பு விடுத்திருந்தாலும், தமக்கு கல்வியையும் அரசையும் இரண்டையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருப்பதாக பேராசிரியர் தேவசிரி வலியுறுத்துகிறார்.
இந்த அரசு வீழ்த்தப்பட்டால், இதைவிட சிறந்த அரசு ஒன்று அதிகாரத்திற்கு வரும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கு சிலர் உடன்படாமலிருக்கலாம். எனினும், ஒவ்வொருவரும் கொண்டுள்ள இடதுசாரி, வலதுசாரி மற்றும் தேசியவாதக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அந்தந்த அரசுகள் வரையறுக்கப்படுகின்றன என்றும் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரி மேலும் தெரிவித்துள்ளார்.