தாம் அல்லது தமது கட்சி எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் பொய்யான அறிக்கைகள் வெளியிடவில்லை என்றும், முடிந்தால் அத்தகைய ஒரு பொய்யான அறிக்கையையாவது சுட்டிக்காட்டுமாறு வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க சவால் விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சியினரால் பரப்பப்பட்ட பொய்யான பிரச்சாரங்களின் காரணமாக கல்வி சீர்திருத்த நடவடிக்கைகள் பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அதன் காரணமாக சீர்திருத்த நடவடிக்கைகள் தாமதமடைந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த சீர்திருத்தங்கள் தொடர்பாக நாட்டிற்குள் அறிவார்ந்த கலந்துரையாடல் ஒன்று இல்லாதிருப்பது வருத்தமளிக்கும் நிலை எனவும் அவர் தெரிவித்தார்.
சபாநாயகர் அசோக ரன்வலவின் பட்டம் தொடர்பாக பொய் கூறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தாம் நிராகரிப்பதாகவும், தனது பட்டம் தொடர்பான தேவையான விளக்கங்களை அவர் ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் வலியுறுத்தினார்.