Print this page

ஜிந்துப்பிட்டியில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை!

கொழும்பு 13, ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (16) கொழும்பு கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் 4 வயது ஆண், 3 வயது பெண் குழந்தைகள் காயமடைந்து லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 44 வயதுடைய, கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார்.

 

சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் வந்து இத்துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு கரையோர பொலிஸாரும், கொழும்பு வடக்கு பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.