Print this page

பொலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

குற்றவாளிகள் மற்றும் சட்டவிரோத வியாபாரிகளுக்கு ஆதரவளிக்கும் பொலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை –பொலீஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய

குற்றவாளிகள் மற்றும் சட்டவிரோத வியாபாரிகளுக்கு ஆதரவளிக்கும் பொலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலீஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

அனுராதபுர புனித நகரத்தின் அரிப்பு பாதை முதல் குறுக்கு தெரு பகுதியில், இலங்கை போலீஸின் இளநிலை போலீஸ் அதிகாரிகளின் நலனுக்காக நிர்மாணிக்கப்பட்ட “ரஜரட்ட சிசில” இளநிலை பொலீஸ் குடியிருப்பை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது பேசிய பொலீஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய,

“பொலீஸ், சட்டவிரோத வியாபாரிகளும், குற்றவாளிகளும் ஒன்றாக இருக்க முடியாது. பொலீஸ் அதிகாரிகள் அந்த நிலைக்கு செல்ல முயன்றால், அதற்கெதிராக தீர்மானங்களை எடுக்க எந்த விதத்திலும் தயங்கமாட்டோம்” என வலியுறுத்தினார்.