Print this page

தங்கம் விலை உச்சத்தில்

கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்காவிற்கும் – ஐரோப்பாவிற்கும் இடையே நிலவும் இராஜதந்திர நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (21) முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்வடைந்துள்ளது.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,800 அமெரிக்க டொலர்களைக் கடந்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.

இன்றைய வர்த்தக ஆரம்பத்திலேயே தங்கத்தின் விலை 1.7 வீதத்தால் அதிகரித்ததுடன், ஸ்பொட் கோல்ட் (Spot Gold) ஒரு அவுன்ஸ் 4,844.39 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இந்த வாரத்தில் மாத்திரம் தங்கத்தின் விலை 5 வீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், வெள்ளியின் விலையும் ஒரு அவுன்ஸ் 95 டொலர் வரை உயர்ந்துள்ளது.
 
உலகளாவிய வர்த்தகப் போர் குறித்த அச்சம் மற்றும் அமெரிக்க டொலரின் மதிப்பு சற்று வீழ்ச்சியடைந்தமை காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துக்களை நோக்கித் திரும்புவதே இந்த விலை அதிகரிப்பிற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
 

இந்த அரசியல் ஸ்திரமற்ற நிலை தொடருமானால், வரும் நாட்களில் தங்கத்தின் விலை 5,000 டொலர் எல்லையை எட்டக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.