Print this page

மதில் இடிந்து விழுந்ததில் மூவர் பலி

அஹங்கம, பெலஸ்ஸ பகுதியில் மதில் ஒன்று இடிந்து விழுந்ததில், அதன் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த மூவரும் உயிரிழந்தனர். 

வேலைத்தளம் ஒன்றில் மதில் ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருந்த மூன்று தொழிலாளர்களே இவ்வாறு இடிபாடுகளுக்குள்  சிக்கியிருந்தனர். 

மதில் சுவருக்கு அடியில் சிக்கியிருந்த மூவரும் நீண்ட நேர மீட்பு பணிகளின் பின்னர் சிகிச்சைக்காக கொன்னகஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

எனினும் குறித்த மூவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.