Print this page

தனியார், அரை அரசுத் துறைக்கு ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் கவனம்

தனியார் துறையிலும் அரை அரசுத் துறையிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தொழில் துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

இன்று (23) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.

“EPF மற்றும் ETF ஆகிய இரு நிதிகளுக்கிடையிலான வேறுபாட்டை நான் மிகவும் தெளிவாக விளக்கியிருந்தேன். EPF நிதியை ஓய்வூதியமாக மாற்றுவதாக நான் எங்கும் கூறவில்லை. நான் கூறிய கருத்து தவறான விதத்தில் புரிந்துகொள்ளப்பட்டது. EPF என்பது சமூக பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட நிதி. தனியார் துறைக்கும் அரை அரசுத் துறைக்கும் ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாகவே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. EPF நிதியை ஓய்வூதியமாக மாற்றுவதாக நான் கூறவில்லை” என அவர் வலியுறுத்தினார்.