Print this page

நீதிமன்ற வளாகத்தில் தங்க சங்கிலி பறிப்பு

ஹட்டன் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற நபரை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து மடக்கி பிடித்துள்ளனர்.

நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தை அண்மித்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியையே இவ்வாறு அறுத்துச் சென்றுள்ளார்.

சந்தேக நபரை, பிரதேசவாசிகளும் ஹட்டன் பொலிஸாரும் சுற்றி வளைத்து மட்டக்கி பிடித்து தங்க சங்கிலியையும் மீட்டுள்ளனர்.

பிடிப்பட்ட இளைஞனை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தியபோது, குறித்த நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

எனினும் அவரது அடையாள அட்டையில் பத்தனை பிரதேசமென குறிப்பிடப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

Last modified on Wednesday, 09 January 2019 03:47