நாட்டின் பிற மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் அங்கு வாழும் மக்களுக்கும் சிறப்பு நியாயம் வழங்கப்பட வேண்டும் என அரசு நம்புவதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
அந்த மாகாணங்களில் பொருளாதாரத்தை நாட்டின் பிற பகுதிகளை விட வேகமாக திறக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும், அதுவே நியாயமும் சமத்துவமும் நிலைநாட்டும் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும், வடக்கு மாகாணத்தில் பல தொழிற்துறை முயற்சிகள் தொடங்கப்படும் என்றும், உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களையும், இலங்கைத் தமிழர் டயஸ்போராவையும் முதலீட்டிற்கு அழைக்கப்படுவதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
பரந்தன் இரசாயன தொழிற்சாலையை திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை கூறினார்.