‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவு நிலை காரணமாக, பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வீடுகளையும் சொத்துகளையும் இழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் வாழ்வில் நிலைநிறுத்தவும், நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் அரசால் “Rebuilding Sri Lanka” என்ற தேசிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், பேரழிவால் முழுமையாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டி வழங்கும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.
அதற்காக தேவையான நிலங்களை தானமாக வழங்குவதற்கு நாடு முழுவதும் உள்ள தானதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மேலதிக தகவல்களை
www.rebuildingsrilanka.gov.lk என்ற இணையதளம் மூலமாகவோ, அல்லது 1800 என்ற தொலைபேசி எண்ணை அழைப்பதன் மூலமாகவோ பெற முடியும்.
மேலும், நிலம் தானமாக வழங்க விரும்புவோரின் விவரங்களை 011 233 1246 என்ற ஃபாக்ஸ் எண்ணுக்கு அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசின் பிரதான இலக்கு, பேரழிவால் பாதிக்கப்பட்ட எந்த குடிமகனையும் புறக்கணிக்காமல், அவர்கள் முன்பு இருந்த வாழ்க்கை நிலைமையைவிட மேம்பட்ட தரத்தில் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதாகும்.
இதன் ஒரு பகுதியாக, “Rebuilding Sri Lanka” திட்டத்துடன் கைகோர்த்து செயல்படுமாறு, நாடு முழுவதும் உள்ள அனைத்து தானதாரர்களுக்கும் அரசால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.