Print this page

தேர்தல் பிரச்சாரத்துக்காக JVP க்கு பணம் வழங்கியது உண்மை

2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக, ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஜனதா விமுக்தி பெரமுன (JVP) மற்றும் ‘புரவெசி பலயா’ அமைப்புகளுக்கும் கணிசமான தொகை பணம் வழங்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

“நாங்கள் JVP-க்கும், அதேபோல் புரவெசி பலயாவிற்கும் பணம் வழங்கினோம். எங்களுக்குக் கிடைத்த நிதியிலிருந்தே அந்த தொகைகள் வழங்கப்பட்டன. அப்போது மூன்று அரசியல் சக்திகள் இருந்தன. எங்களுடைய மேடை தனியாக இயங்கியது. மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எங்கள் கட்சி ஒரு பக்கம். மற்றொரு பக்கம் புரவெசி பலய. அவர்களும் ராஜபக்சர்களை எதிர்த்தனர். இன்னொரு பக்கம் JVP ராஜபக்சர்களை எதிர்த்து செயல்பட்டது. மூன்று திசைகளிலிருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டதன் மூலம் தான் ராஜபக்சர்கள் தோற்கடிக்கப்பட்டனர். வழங்கப்பட்ட தொகை சிறிய அளவல்ல. கோடிக்கணக்கான ரூபாய்கள் வழங்கப்பட்டன” என அவர் கூறினார்.

இந்த கருத்துக்களை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ‘ஹிரு சடன’ (Hiru Satana) அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்தார்.